மகேஷ்பாபுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

slider சினிமா

 

Mahesh-Babu-Keerthi-Suresh

 

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுமட்டுமல்லாது கார்த்திக்  சுப்புராஜ் தயாரிக்கும்  ‘பெண்குயின்’ படத்தில் கர்ப்பிணியாக நடித்து வருகிறார்.  இவருக்கு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் வந்து குவின்றன.

தற்போது தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய ’கீதா கோவிந்தம்’ படத்தின் இயக்குநர் பரசுராம் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தெலுங்கில் பெரிய ரவுண்ட் வருவார் என்கிறது டோலிவுட் வட்டாரம்.  ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்ததிற்கு இவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.