சூர்யாவுக்காக ஹரி தேர்வு செய்த நடிகை!

slider சினிமா
Pooja-Hegde

 

நடிகர் சூர்யாவின் 39-வது படத்தினை இயக்குநர் ஹரி இயக்குகிறார். இவர்கள் இருவரின் கூட்டணியில் ஏற்கெனவே பல படங்கள் வெளியாகி, மாபெரும் வெற்றியைத் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இணைந்துள்ள இக் கூட்டணி, தங்களுடைய புதிய படத்திற்கு  ‘அருவா’ என்று தலைப்பிட்டது. ஆனால், அந்த தலைப்பு ஏற்கனவே பதியப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, படத்திற்கு வேறொரு தலைப்பை தேர்ந்தெடுக்கும் முன்னரே படப்பிடிப்பை நடத்தி முடிக்க ஆயத்தமான நிலையில், கொரானா சிக்கல் வந்துவிட்டது.

ஆம், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும்  தடைபட்டுள்ளதால், இயக்குநர் ஹரி தற்போது நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், இதில் முக்கியமாக சூர்யாவின் ஜோடியாக பூஜா ஹெக்டே தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்த  அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

நடிகர்  சூர்யா நடித்து முடித்துள்ள  ‘சூரரை போற்று’ படம் மே அல்லது ஜூன் மாதங்களில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.