இந்தியா வந்திருக்கும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணியர் நாடு திரும்ப நடவடிக்கை

slider உலகம்
Malindo

 

உலகமெங்கும் கொரான வைரஸ் பாதிப்பு காரணமாக விமான சேவைகள் முற்றிலுமாக முடங்கிப் போனது. இதன் காரணமாக, மலேசியாவிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்த மலேசியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது அவர்கள் தங்களின் தாயகமான மலேசியா திரும்புவதற்கு உதவும் வகையில் நாளை முதல் மூன்று நாள்களுக்கு திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு விமானம் இயக்கப்படும் மலிண்டோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து மலிண்டோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில்கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, இந்தியா முழுவதுமுள்ள விமான நிலையங்கள் செயல்படாமல் உள்ளன. இதனால், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த பலர் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பமுடியாமல் தவித்துவருகின்றனர். இந்நிலையில், திருச்சியில் தவித்துவரும் மலேசிய சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையில் மூன்று நாள்கள் மலேசியாவுக்கு சிறப்பு விமானம் இயக்கப்படவுள்ளது. திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு இயக்கப்படும் மலிண்டோ விமானம் மூன்று நாள்களுக்கு இயக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று ஜெர்மன் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த 155 ஜெர்மானியர்கள், அவர்களின் நாட்டிற்கு திரும்பிச் செல்லும் வகையில், இன்று சென்னையிலிருந்து ஜெர்மனிக்கு சிறப்பு விமானம் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.