மனித குலத்துக்கு துணிச்சல் அளிக்கும் நோபல் விஞ்ஞானி!

slider உலகம் மருத்துவம்
Michel-Levitt

 

கொரானா பாதிப்பிலும் பலியிலும் தற்போதைய நிலவரப்படி அமெரிக்காதான் உலகில் முன்னணியில் உள்ளது. அடுத்ததாக ஸ்பெயினும், இத்தாலியும் உள்ளன. கொரானா குறித்த எந்தவொரு நல்ல தகவலுக்காகவும் ஒட்டுமொத்த மனித குலமே தவம் கணக்காய் காத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நோபல் பரிசு பெற்ற ஒரு விஞ்ஞானி இந்த விஷயத்தில் நம்பிக்கையளிக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போதைக்கு உலக மக்களுக்கு பெரும் ஆறுதலையும் துணிச்சலையும் அளித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி உலகில் 199-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரானா  பரவியுள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 721,412 ஆகியுள்ளது.  இதுவரை உலகளவில்  33,956 பேர் பலியாகியுள்ளனர். 1,51,004  பேர் இந்த நோயிலிருது மீண்டுள்ளனர்.  இந்நிலையில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான  நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் “கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது. தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும்.  சமூக விலகல் இந்த நேரத்தில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமான ஒரு சக்தியை  உலகிற்கு அளித்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.

இவரின் இந்தப் பேச்சுக்கு உலகில் முக்கியத்துவம் ஏற்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது, சீனாவில் கொரோனா வைரஸ் பரவியபோது சீனா குறித்து உலகளவில் பல்வேறு நிபுணர்கள் பல்வேறு விதமான கருத்துகளை வெளியிட்டிருந்தனர். இதில் மைக்கேல் லெவிட் தான்  துல்லியமான கணிப்புகளை வெளியிட்டிருந்தார்.  அதாவது, ‘சீனாவில் 80,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்படுவார்கள் மற்றும் 3,250 உயிரிழப்புகள் ஏற்படலாம்’ என்று மைக்கேல் லெவிட் கணித்து கூறியிருந்தார். இதுபோலவே நடந்துள்ளது.

மேலும்,   இவரது கூற்றுப்படியே சீனாவில் 3277 உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், 81,171 பேர் பாதிக்கப்பட்டியிருப்பதாகவே தகவல்கள் கூறுகின்றன. மேலும், இவரின் கூற்றின்படியே சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், சீனாவில் கொரோனா வைரஸின் ஆரம்பமாகவிருந்த ஹூபே மாகாணம் நீண்ட நாட்களுக்குப் பின் தற்போது இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், உலகளவில் இவரின் சமீபத்திய இந்தப் பேச்சுக்கு பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் ஏற்பட்டிருக்கிறது.

  • எம்.டி.ஆர். ஸ்ரீதர்