திருநங்கைகளுக்கு இரக்கம் காட்டிய மஞ்சுவாரியர்!

slider சினிமா
MANJU-WARIYAR

 

சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மலையாள  நடிகை  மஞ்சு வாரியர். இவர் கேரளாவில் கொரானா பாதிப்புக்கு மக்கள்  ஆளான ஆரம்பத்திலே மலையாள சினிமா தொழிலாளர்களுக்கு உதவுதற்கு ரூ.5 லட்சம் வழங்கியிருந்தார்.

இப்போது கேரளாவில் கொரானாவினால் பாதிப்பு அடைபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்துக் கொண்டிருக்கிம் இவ்வேளையில் ஊரடங்கு சட்டமும் அமலில் உள்ளதால், கேரள மாநிலத்தில் வாழும் திருநங்கைகள் அதிகளவில் கஷ்டங்களை எதிர்கொள்வதாக தகவல்கள் வெளியாயின. இதனையறிந்த நடிகை மஞ்சு வாரியர் கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் திருநங்கைகளுக்கான  ‘திவ்யா’ என்ற அமைப்பின் தலைவரும், மேக்கப் கலைஞருமான ரெஞ்சு ரெஞ்சிமர் என்பவரை தொடர்பு கொண்டு,  ‘இக்கட்டில் சிக்கியுள்ள திருநங்கையர்களுக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்கிறேன்’ என்று ஆறுதல் கூறி, சொன்னபடியே அப் பொருட்களை அனுப்பியும் வைத்திருக்கிறார். இதனால், கேரள வாழ் திருநங்கைகள் மஞ்சுவாரியருக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.,