இளைய தளபதிக்காக காத்திருக்கும்  ராஜமவுலி!

slider சினிமா
DIRECTOR-RAJAMOULI

 

தெலுங்கில் மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘பாகுபலி’  படம் மூலமாக இந்தியா அளவில் பிரபலமானவர் இயக்குநர் ராஜமவுலி. தற்போது இவர்  ‘ரத்தம் ரணம் ரவுத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில்  தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் மற்றும் பாலிவுட் பிரபலம் அஜய் தேவ்கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சுமார் 400 கோடி ரூபாய் செலவில் இப்படம் உருவாகி வருகிறது.

மேலும், தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.    இதில்  எப்படியாவது இளைய தளபதியை விஜய்யை கௌரவ தோற்றத்தில் நடிக்க வைக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளார் என்றும்,  இதன்மூலம் தமிழ், மலையாளத்தில் இந்த படத்துக்கு வரவேற்பு கிடைக்கும் என்று கருதுவதாகவும், இதற்காக விஜய்யை அணுகி பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் நடிப்பாரா? இல்லையா? என்கிற தகவல் விரைவில் வெளிவரும்.