விழிப்பு ஏற்படுத்திய பாடகரும் பாடலாசிரியரும்!

slider மருத்துவம்
VAIRAMUTHU-S.P.B

 

தமிழ் சினிமாவுலகின் பிரபலங்களான எஸ்.பி.பாலசுப்ரமண்யமும், வைரமுத்துவும் நெருங்கிய நண்பர்களும்கூட. தற்போது கொரானா வைரஸ் பாதிப்பால் உலகமே அச்சத்தில் வாழ்ந்து வருகிறது. அதேநேரத்தில் மக்களிடையே சிறு அளவில் அலட்சியமும் இருந்து வருகிறது. இதை முன்னிட்டு மக்களிடையே கொரானா குறித்த விழிப்புணர்ச்ச்சியை ஏற்படுத்தும் வகையில் வைரமுத்து எழுதிய வரிகளுக்கு இசையமைத்து பாடி வெளியிட்டுள்ளார் எஸ்.பி. பாலசுப்ரமண்யம்.

கொரானா விழிப்புணர்வுக்காக பாடலாசிரியர் வைரமுத்து, “அணுவை விட சிறியது, அணுகுண்டை போல் கொடியது” என அவரின் ஒப்பீடு எவ்வளவு உண்மை. “கொரோனா சத்தமில்லாமல் நுழைந்து, போரே போடாத நிலையிலும் உலகை நிலைகுலையச் செய்துள்ளது. தொடுதல் வேண்டாம், தனிமையில் இருங்கள், தூய்மையாய் இருங்கள், கொஞ்சம் அச்சமும் இருக்கட்டும், அதைப் பற்றிய தெளிவும் இருக்கட்டும்’’ என்று எழுதியுள்ளார். இந்தப் பாடல் தற்போது பெரியளவில் வைரலாகி வருகிறது.