‘கனா’ இயக்குநரின் படத்தில் உதயநிதி!

slider சினிமா
UDHAYANITHI-PONIKAPOOR-ARUNRAJKAMARAJ

 

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்த  ‘கனா’ படத்தை இயக்கியவர் அருண்ராஜ் காமராஜ். இவர் ஒரு பாடலாசிரியரும் கூட.  ‘கனா’வுக்குப் பிறகு இவர் விஜய்யின் 65-வது படத்தை இயக்கவுள்ளதாக முன்பு தகவல் வெளியானது. ஆனால், அந்தப் படம் குறித்து மேற்கொண்டு எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்போது அருண்ராஜ் காமராஜ், உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படத்தை இயக்கப் போவதாகவும், இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கவுள்ளதாகவும், மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கோலிவுட் வட்டார தகவல்கள் கூறுகின்றன. போனிகபூர் தற்சமயம் அஜித் நடிப்பில், வினோத் இயக்கும் படத்தை தயாரித்து வருகிறார்.