வில்லனாகும் ஆர்யா!

slider சினிமா
Simbu-Arya

 

நடிகர் சிம்பு நடித்துவரும் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கப்பட்டது.  இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கொரோனா பாதிப்பு முடிவுக்கு  பின்னர் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளது.

’மாநாடு’ படத்திற்கு பிறகு, இயக்குநர் மிஷ்கின் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது ’அரிமா நம்பி’, ’இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர்  சிம்புவை வைத்து முழுக்க முழுக்க  ஆக்‌ஷன் படம் ஒன்றை எடுக்கவிருப்பதாகவும், இதில் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்கவிருப்பதாகவும், இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கவிருப்பதாகவும் கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.