காவல்துறைக்கு முக கவசம் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

slider மருத்துவம்
Sai-Charan-Tejaswi

 

தமிழகத்தில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முன்னிட்டு அரசால் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. காவல் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அணியும் முககவசத்துக்கு அடிக்கடி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. பல தனியார் நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் காவல்துறைக்கு தங்களால் முடிந்தளவு முக கவசங்களை வழங்கி வருகின்றனர்.

இந்த வகையில் தேனி மாவட்ட  விஜய் மக்கள் இயக்கத்தினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியை நேற்று (26.3.2020) நேரில் சந்தித்து விஜய் ரசிகர்கள் சார்பில் 200 முக கவசங்களை வழங்கியுள்ளனர். அப்போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் உடன் இருந்துள்ளார்.  விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பெருமளவு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவியத் தொடங்கியிருக்கிறது.