தனிமையில் ஸ்ருதிஹாசன்!

slider சினிமா
SRUTHI-HASAN

 

நடிகை ஸ்ருதிஹாசன் பத்து நாட்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார். தற்போது கொரானா வைரஸ் கோரப்படியில் இந்தியாவும், தமிழகமும் தவித்துவரும் நிலையில், சென்னை திரும்பிய ஸ்ருதிஹாசன் உடனடியாக தனது தந்தையான கமல் வீட்டில் ஓர் அறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தன்னை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தனது  ட்வீட்டில் ஸ்ருதிஹாசன், “இந்த நிலைமை கொஞ்சம் கடினமாக இருந்தாலும் மற்றவர்களின் நலன் கருதி பின்பற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். தற்போது என்னுடன் உதவியாளர்கள் யாரும் இல்லை. கிளாரா( பூனை) மட்டும் தான் என்னுடன் இருக்கிறது’’ என்று பதிவிட்டுள்ளார். ஸ்ருதிஹாசனின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.