சசிகுமார் – சரத்குமார் காம்பினேஷனில் இரண்டாவது படம்!

slider சினிமா
Sasikumar-Sarathkumar

 

சசிகுமாரும், சரத்குமாரும்  ‘நாநா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து அடுத்து ஒரு படத்திலும் இவர்கள் சேர்ந்து நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகவுள்ளது. மலையாளத்தில் வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற படம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் பிருத்விராஜ், பிஜுமேனன் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  எளிமையான கதையை புதிய வடிவில் சொன்னதால், இந்தப் படம்  மலையாள சினிமா  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இப்போது தமிழில் ‘அய்யப்பனும் கோஷியும்’ உரிமையை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பெற்றுள்ளார்.   இதில் பிருத்விராஜ் வேடத்தில் சசிகுமாரும், பிஜூமேனன் வேடத்தில் சசிகுமாரும் நடிக்க இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தைகள் விரைவில் வெளிவரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.