மத்தியபிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி!

slider அரசியல்

 

சிவராஜ்சிங் சவுகான்

 

மத்தியபிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்புவரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. அதிரடி மாற்றமாக காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து  இப்போது பா.ஜ.க. ஆட்சி ஏற்பட்டுள்ளது. முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் பொறுப்பேற்றுள்ளார். இந்தியாவில் கொரானா அச்சுறுத்தலுக்கு நடுவில் இப்படியொரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் இளம்  காங்கிரஸ்  தலைவராகவிருந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் முதல்வராக இருந்த மூத்த தலைவர் கமல்நாத்துக்கும் இடையே மோதல் முற்றி ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேருடன் காங்கிரஸிலிருந்து விலகி  சில வாரங்களுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்தார். இதன் தொடர்ச்சியாக ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவாளர்களான ஆறு அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கினர். இதனால் கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்தது. மத்தியபிரதேச கவர்னர் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். தனது அரசுக்கு பெரும்பான்மை என்பதை அறிந்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு கவர்னர் கெடு விதித்ததிற்கு முன்பே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்.  இதனையடுத்து மத்தியபிரதேசத்தில் எந்த நேரத்திலும் பா.ஜ.க. அரசு அமைக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில் மத்தியபிரதேச முதல்வராக பா.ஜ.க.வின் சிவராஜ்சிங் சவுகான் முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மத்தியபிரதேச சட்டசபைத் தேர்தலில் இரண்டுமுறை தொடர்ந்து ஆட்சியில் இருந்து முதல்வர் சவுராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சி பெரும்பான்மை பெறாததால் காங்கிரஸ் ஆட்சி அங்கு ஏற்பட்டது. ஆனால், காங்கிரஸுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேயான சட்டசபை பலம் மிகவும் குறைந்த அளவு வித்தியாசத்திலே இருந்தது. இதுதான் பா.ஜ.க.வின் 22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததுடன் காங்கிரஸ் ஆட்சி இழக்கவும் பா.ஜ.க. ஆட்சியமைக்கவும் வழி வகுத்துள்ளது. மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்திருப்பது காங்கிரஸுக்கு தேசிய அளவிலும் பெரும் சரிவாகவே கருதபடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்