காஜல் அகர்வாலின் புதிய முடிவுகள்!

slider சினிமா
KAJAL-AGARWAL

 

தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் தற்போது மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கி வரும் இந்தப் படத்துக்கு  ‘ஹே சினாமிகா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் அதிதி ராவும் நடிக்கிறார்.

காஜல் அகர்வால் முன்பெல்லாம் டாப் ஹீரோக்களுடன் தான் நடிப்பேன் என்கிற கொள்கையை வைத்திருந்தார். தற்போது இதை தளர்த்தியுள்ளார் என்றும், மேலும், வழக்கமான கதாநாயகியாக நடிப்பதைவிட  ரிஸ்க்கான வேடங்களிலும், கதைக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களிலும் நடிக்க தயாராகி வருகிறார் என்றும்  இளம் நடிகர்களுடன்  நடிக்கவும்  முடிவு செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.