ஏப்ரலில் ’மாஸ்டர்’ படத்தின் டிரைலர் வெளியீடு!

slider சினிமா
Master-Vijay

 

இளைய தளபதி விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது.  சில தினங்களுக்கு முன்பு  இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது  ‘மாஸ்டர்’ படத்தின் டிரைலர் மார்ச் 22-ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது.

ஆனால், தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிடவில்லை. அதேநேரத்தில் எதிர்பாராதவிதமாக  ‘அந்த கண்ண பாத்தாக்கா …’ என்கிற படத்தின் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.  மேலும்,  ’மாஸ்டர்’ படத்தின் டிரைலரை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.