கொரானா காற்றில் பரவாது

slider மருத்துவம்

 

“உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காற்றின் மூலமாகப் பரவாது. ஒருவரிடமிருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வாயிலாக மட்டுமே அது பரவும்” என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று தெரிவித்துள்ளது.

கொரானா வைரஸ் தொற்றுக் கிருமியின் பரவல் பற்றி ஆராய்ந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பால்ராம் பார்கவா இன்று வெளியிட்ட அறிக்கையில் “கொரோனா வைரஸ் காற்றில் பரவாது. காற்றின் மூலமாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவாது. ஆனால், ஒருவரிடமிருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வாயிலாக எளிதாகப் பரவும். கொரானா பரவல் ஆய்வுக்காக இந்தியாவில் இதுவரை 17 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. தினமும் 10 ஆயிரம் பேர் என வாரத்திற்கு 70 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளை எடுத்து கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தும் திறன் நம்மிடம் உள்ளது. எனவே, கொரானா தொற்று பற்றிய தெளிவான ஆய்வு பற்றியும், கொரானா தடுப்பு மருந்து பற்றியும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. விரைவில் இதற்கான முடிவுகள் தெரியவரும்” என்றார்.