மலையாள ரீமேக்கில் லாரன்ஸ்!

slider சினிமா
Lawrence

 

நடிகரும்,  இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தற்போது  ‘காஞ்சனா’ படத்தை இந்தியில்  ‘லட்சுமி பாம்’ என்கிற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில்  மலையாளத்தில் வெளியாகி  வெற்றிபெற்ற  ‘ஐயப்பனும் கோஷியும்’ படத்தின் ரீமேக் உரிமையை சமீபத்தில் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கினார். இந்த  ரீமேக்  படத்தில் லாரன்ஸ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவெடுத்த தயாரிப்பாளர், லாரன்ஸிடம் பேசி சம்மதமும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.   இதில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்க பிரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும்   தகவல் வெளியாகியுள்ளது.