அஜித்தை இயக்கும் மூன்றாவது பெண் இயக்குநர் 

slider சினிமா

 

Ajith Sudha Gongarah

 

வினோத் இயக்கத்திலும்,  போனி கபூர் தயாரிப்பிலும் அஜித் போலீஸ் அதிகாரி வேடத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்தப் படம் அஜித்துக்கு 60-வது படமாகும். இதனிடையே அஜித்தின் 61-வது படத்தை இயக்கப்போவது யார் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இப்போது அஜித்தின் 61-வது படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான  ‘இறுதிச்சுற்று’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.  இரண்டாவது படமாக நடிகர் சூர்யாவின்  ‘சூரரைப் போற்று’ வெளிவரத் தயார் நிலையில் உள்ளது.

அஜித்தின் ’உயிரோடு உயிராக’ படத்தை சுஷ்மா அஹுஜாவும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் அஜித் நடித்த ’இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தை இயக்கிய கவுரி ஷிண்டேவும் பெண் இயக்குநர்கள் ஆவர். சுதா கொங்கரா அஜித்தை இயக்கும் மூன்றாவது பெண் இயக்குநர்.