மீண்டும் விக்ரம் பிரபுக்கு ஜோடியாகும் லட்சுமிமேனன்!

slider சினிமா

 

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality

 

இயக்குநர் பிரபு சாலமனின் ‘மைனா’ படத்தில் நடிகர் விக்ரம் பிரபு அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தது மூலம் நடிகை லட்சுமிமேனன் தமிழ் படவுலகில் அறிமுகமானார். இதன்பிறகு   ‘சுந்தரபாண்டியன்’, ‘பாண்டியநாடு” உட்பட சில படங்கள் மூலம் பிரபலமும் ஆனார்.  கடைசியாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ’றெக்க’ படத்தில் நடித்திருந்தார். அதன்பின் படிப்பில் கவனம் செலுத்துவதற்காக லட்சுமி மேனன் நடிப்பை நிறுத்தியிருந்தார்.

தற்போது லட்சுமிமேனன் உடல் எடையை குறைத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த களம் இறங்கியுள்ளார். இதன் ஆரம்பமாக மீண்டும் நடிகர் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் லட்சுமி மேனன். இந்த புதிய படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். மற்றொரு ஹீரோயினாக நடிகை ஸ்ரீ திவ்யா நடிக்கிறார்.  இது குறித்த வேறு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக  வெளிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.