போலீஸ் அதிகாரி வேடத்தில் அதர்வா!

slider சினிமா
Atharva

 

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான மைக்கேல் ராயப்பன் தயாரிக்கவுள்ள படத்தில் அதர்வா ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார். இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில்  ‘பிரம்மன்’,  ‘மாயவன்’ படங்களில் நடித்தவர். இப்படத்தை புதுமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார் .

இந்தப் படத்தில் அதர்வா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  அடுத்து  நடிகர் நந்தா வில்லனாக நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கப்பட உள்ளதாகவும், படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் எனவும் இயக்குநர் ரவீந்திர மாதவா சமீபத்தில் தெரிவித்துள்ளார்.