மோடியை சீண்டிய சிவசேனைத் தலைவர்

slider அரசியல்

 

uthavthakere-modi

 

இந்திய பிரதமர் மோடி  ‘கொரானா’ விழிப்புணர்ச்சியை முன்னிட்டு நேற்று (19.3.2020) நாட்டு மக்களுக்கு அளித்துள்ள வேண்டுகோளில் வரும் ஞாயிற்றுக் கிழமை (22.3.2020) பொது மக்கள் சுய ஊரடங்கை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்தத் தகவல் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவெங்கும் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணியாக இருந்துவந்த சிவசேனைக் கட்சித் தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே தற்போது மோடியின் இந்தப் பேச்சு குறித்து கேள்வி எழுப்பியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரத்திலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், இதுவரை உலகம் முழுவதும்  ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ளது.  மேலும், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்தச் சூழலில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.  தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும்  பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 206 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் கொரானா வைரஸ் பாதிப்பால் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.  கரோனாவைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று (22.3.2020) மக்கள் மக்களுக்காக சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி நேற்று (19.3.2020)  வேண்டுகோள் விடுத்தார். அதாவது வரும் ஞாயிறன்று  காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அவசியத் தேவையின்றி யாரும் வெளியே வரத் தேவையில்லை. முடிந்தவரை மக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு தற்போது மகாராஷ்டிரத்தின் முதல்வரும், சிவசேனை கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே, ‘பிரதமர் நரேந்திர மோடி கரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு சமூக தூரத்தை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். மறுபுறம் அவர் அரசியல் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தை செயல்பட அனுமதிக்கிறார்’ என்று கேள்வி எழுப்பி அதிரடி கிளப்பியுள்ளார்.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக  வணிகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி உட்பட அனைத்து துறைகளுமே கொரானா முன்னிட்டு ஸ்தம்பித்து போயுள்ள இந்தச் சூழலில் அரசு நிர்வாகத் தலைவராக பிரதமர் ஒரு முடிவு எடுக்கிறார். அதுபற்றி நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறார்.  சர்வதேச மற்றும் தேசிய பேரிடராக அரசு நிர்வாகம் அறிவித்து செயல்பட்டு வருகிறது. ஆகவே, அரசியல் துறையும் ஒற்றுமையாக நின்று அரசு நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அப்பாவி உயிர்களை கொரானா தோற்று நோய் பலிவாங்குவதிலிருந்து காப்பாற்ற முடியும். இதில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி பேதம் ஏற்படுவதை எந்தவொரு இந்தியக் குடிமகனும் விரும்பமாட்டான் என்பது நடுநிலையாளர்கள் கருத்து.

தொ.ரா.ஸ்ரீ.