பாகுபலி இயக்குநர் படத்திலிருந்து விலகும் பிரபல நடிகை!

slider சினிமா

 

ALIYABHATT

 

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ’பாகுபலி’. இந்தப் படத்தை இயக்கிய ராஜமவுலி அடுத்ததாக  தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்.’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.  ஆந்திராவில் சுதந்திர போராட்ட வீரர்களாக வாழ்ந்து மறைந்த சீதாராமராஜு, கொமராம்பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. ஏறக்குறைய  உலகம் முழுவதும் பத்து மொழிகளில் ரிலீஸாகவிருக்கிறது.

மேலும், இதில் பாலிவுட் பிரபலமான அஜய் தேவ்கான்,  தமிழ் பிரபலமான சமுத்திரகனி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதேபோல் நடிகைகளில் பாலிவுட் நடிகை அலியா பட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க  முன்பு ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், தற்போது அலியா பட் இந்தப் படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு அடுத்தடுத்து தள்ளிப்போவதாலும், கால்ஷீட் பிரச்சனை ஏற்படும் என்பதாலும் இப்படத்திலிருந்து அவர் விலகி இருப்பதாக கூறப்படுகிறது.  ஆனாலும், படக்குழு இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.