கிரிக்கெட் பயிற்சிக்கு தயாராகும் விஜய் சேதுபதி!

slider சினிமா

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்சேதுபதி விஜய்யுடன் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மேலும், விஜய்சேதுபதி நடித்து முடித்திருக்கும்   ‘க/பெ ரணசிங்கம்’, ‘மாமனிதன்’, ‘கடைசி விவசாயி’ உள்ளிட்ட பல படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘லாபம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘துக்ளக் தர்பார்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்கள் படப்பிடிப்பில் இருந்து வருகின்றன. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இலங்கை கிரிக்கெட் அணி பிரபலம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் முத்தையா முரளிதரனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார்.  எம்.எஸ்.ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார்.

இந்தப் படம் பற்றி அறிவிப்பு வெளியானவுடனேயே சில தமிழ் அமைப்புகள் சார்பில்  ‘இலங்கை வீரரின் கதையில் தமிழரான விஜய் சேதுபதி நடிப்பதா?’ என்று  விமர்சிக்கப்பட்டது. இதனால் இந்தப் படம் தொடங்கப்படுமா என்கிற கேள்வி ஏற்பட்ட நிலையில் இப்போது முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய் சேதுபதி என்கிற தகவல் வந்துள்ளது.  மேலும், இந்தப் படத்தில் நடிக்கவுள்ள விஜய் சேதுபதி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாம்.   முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டில் 800 விக்கெட்களை வீழ்த்தியவர் என்பதால் இந்தப் படத்துக்கு ‘800’ என்றே தலைப்பிடவும் முடிவு செய்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.