வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு!

slider சினிமா

 

VIJAYSETHUPATHY

 

 

    சில தினங்களுக்கு சென்னையில் நடைபெற்ற  ’மாஸ்டர்’ பட இசை வெளியீட்டு விழாவில் இளைய தளபதி விஜய்யும்,  மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டனர். இந்த விழாவில்  விஜய் சேதுபதி பேசிய பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பலத்த ஆதரவு கிடைத்திருக்கிறது. 

    இந்த விழாவில் விஜய் சேதுபதி பேசுகையில்,  “கொரோனாவைவிட தற்போது இன்னொரு வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சாமிக்காக எல்லோரும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை. சாமி பல கோடி வருடங்களாக இருக்கிறது. சாமியை காப்பாற்ற இன்னும் மகாமனிதனை சாமி படைக்கவில்லை. சாமி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். சாமியைக் காப்பாற்றுகிறேன் என்று கூறும் கூட்டத்தோடு பழகாதீர்கள். சாமியை சாதாரண மனிதனால் காப்பாற்ற முடியாது. யாராவது சாமி பற்றியோ என்னுடைய மதம் இப்படிச் சொல்கிறது என்று பேசினால் பதிலுக்கு என்னுடைய மதம் இப்படி சொல்கிறது என்று பேசாதீர்கள். அதற்கு பதில் மனிதத்தையும், மனித நேயத்தையும் கற்றுக் கொடுங்கள். கடவுள் மேல இருக்கான். பூமியில் வாழும் மனிதர்கள் நாம் தான் ஒவ்வொருவருக்கும் பக்கபலம். இது மனிதன் வாழ்வதற்கான இடம். சகோதரத்துவத்தோடு சந்தோ‌ஷமாக வாழுங்கள். அன்பை மட்டுமே பகிர்ந்து வாழுங்கள். மதத்தைச் சொல்லி கடவுளை பிரிக்கப் பார்க்கிறார்கள். மனிதனுக்கும், கடவுளுக்கும் இடையில் மதம் என்பது கிடையாது” என்று பேசியுள்ளார். விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சு முன் எப்போதும் இல்லாதைவிட அதிக வைரல் ஆகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.