வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா!

slider சினிமா

 

ஆண்ட்ரியா

 

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான வெற்றிமாறன் அவ்வப்போது சில படங்களை  தயாரித்தும் வருகிறார்.  குறிப்பாக. இவரது தயாரிப்பில் வெளியான  ‘காக்கா முட்டை’  ,‘விசாரணை’ மற்றும் ‘மிகமிக அவசரம்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவரது தயாரிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படம் திரில்லர் கதையம்சத்தில் உருவாக உள்ள படம் என்றும், ஒரு புதுமுக இயக்குநர் இயக்க உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும், இந்தப் படத்தில் நடிகைகள் ஆண்ட்ரியா மற்றும் லவ்லின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர் என்றும், வரும்  மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே  நடிகை ஆண்ட்ரியா வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட   ‘வடசென்னை’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பதும்,  அடுத்து தேசிய விருது வென்ற வெற்றிமாறனின் ’ஆடுகளம்’ படத்தில்  கதாநாயகியாக நடித்த, நடிகை டாப்சிக்கு ஆண்ட்ரியாதான் பின்னணி குரல் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.