வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த இயக்குநர்!

slider சினிமா
ACTOR VIJAY

 

‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 65-வது  படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில்  அதிகமாகி வரும் நிலையில், இயக்குநர்கள் முருகதாஸ், சுதா கொங்காரா, லோகேஷ் கனகராஜ், மகிழ் திருமேனி, ஷங்கர், அஜய் ஞானமுத்து ஆகியோரது பெயர்கள் அடுத்த படத்தின் இயக்குநர்கள் வரிசையில் உள்ளன.

இதன் தொடர்ச்சியாக விஜய்யின் 65-வது படத்தை ’கோப்ரா’ பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க உள்ளதாகவும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பான புகைப்படத்தை பதிவிட்ட விஜய் ரசிகர் ஒருவர், ’’இது உண்மையா?’’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு தற்போது மறுப்பு தெரிவித்துள்ள இயக்குநர் அஜய் ஞானமுத்து, “இது யார் பார்த்த வேலைனு தெரியலையே” என கமெண்ட் அடித்துள்ளார்.  இதன்மூலம் இவர் விஜய்யின் 65-வது படத்தை இயக்கவில்லை என்பது உறுதியாகிறது. அப்படியென்றால், மீதமுள்ள இயக்குநர்களில் யாரோ ஒருவர்தான் விஜய்யின் 65வது படத்தை இயக்கப்போகிறார்.