பணத்திற்காக வீரர்களின் உயிரை மதிக்கவில்லை – சாய்னா நேவால்!

slider விளையாட்டு
சானியாநோவால்

 

இங்கிலாந்திலுள்ள பர்மிங்காம் நகரத்தில், கடந்த வாரம் நடந்த ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய பேட்மிண்டன் பிரபலம் சாய்னா நேவால் கலந்து கொண்டு  முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார். இந்தத் தோல்வியினால் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு மீண்டும் தகுதி பெறுவது கேள்விக்குறியாகி இருக்கிற நிலையில், இந்தப் போட்டியை கொரானா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கும் சமயத்தில் நடத்தியது குறித்து பல்வேறு எதிர்ப்புகள் விளையாட்டுத் துறையில் உலகில் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய பேட்மிண்டன் பிரபலம் சாய்னா நேவால் தனது டுவிட்டரில், ’’ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் வீரர்களின் நலனைக் காட்டிலும் பணத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக நான் நினைக்கிறேன். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தப் போட்டி திட்டமிட்டபடி நடத்தப்பட்டதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?’’  என்று பதிவிட்டுள்ளார். அவருடைய இந்தப் பதிவு உலக அளவிலான விளையாட்டு வீரர்களின் கவனத்தை ஈர்த்து, ட்ரென்டிங் ஆகிவருகிறது.