எதிர்ப்புக்கு இடையில் பதவியேற்று சமாதானத்தை தூதுவிட்ட தலைமை நீதிபதி

slider அரசியல்
RANJANGOKAI

 

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்து அண்மையில் ஓய்வு பெற்ற ரஞ்சன் கோகாய், இன்று ராஜ்யசபாவில் நியமன எம்.பி.,யாக நியமிக்கப்பட்டார்.  அவர் பதிவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து “என் பதவியேற்புக்கு வெளிநடப்பு செய்தவர்கள் விரைவில் என்னை வரவேற்பார்கள்” என ரஞ்சன் கூறியுள்ளது இன்றைய அரசியல் செய்திகளில் ட்ரென்ட் ஆகியுள்ளது

இந்தியாவின் 46வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த ரஞ்சன் கோகாய், பல முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு அளித்துள்ளார். குறிப்பாக அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்து தீர்ப்பளித்தவர் இவர்தான். கடந்த 2019ம் ஆண்டு நவ.,17 ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர்,  ராஜ்யசபா நியமன எம்பி., பதவிக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களால் நியமனம் செய்யப்பட்டு, இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இவர் பதவியேற்றபோது காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியபடியே,   ‘அவமானம் அவமானம்’ என தொடர்ந்து குரல் எழுப்பி, அவையில் இருந்த வெளிநடப்பு செய்தனர். இந்த அமளிக்கு இடையே பதவியேற்ற ரஞ்சன் கோகாய், “வெளிநடப்பு செய்தவர்கள் விரைவில் என்னை வரவேற்பார்கள்” என்று கூறி, அவையில் மீதமிருந்த உறுப்பினர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ரஞ்சன் கோகாய் இந்திய உச்சநீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய பின்னரே, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இவர் பதவி வகித்தார்.

1954ம் ஆண்டு, நவம்பர் 18ம் தேதி அசாம் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள திப்ருகர் நகரில், புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் ரஞ்சன் கோகோய் பிறந்தார். இவருடைய தந்தை கேசவ் சந்திர கோகோய் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் அசாம் மாநில முதலமைச்சராக 1982ம் ஆண்டு பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திப்ருகர் நகரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் படித்த ரஞ்சன் கோகோய், டெல்லியின் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாறு பயின்றார். பின்னர் தனது தந்தையைப் போலவே சட்டம் பயின்ற இவர், 1978ல் வழக்கறிஞர் சங்கத்தில் இணைந்து, குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலைச் செய்துவந்தார். 2001 பெப்ரவரி 28 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2010 பெப்ரவரி 12 அன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர், 2011 பெப்ரவரி 12 அன்று தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். அதைத் தொடர்ந்து, 2012 ஏப்ரல் 23 அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு 2018 அக்டோபர் மூன்றாம் நாளன்று இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்

அயோத்தி பிரச்சினையில் ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 09 நவம்பர் 2019 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் 70 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ராம ஜென்மபூமிபாபர் மசூதி நில வழக்கு முடிவுக்கு வந்தது என்பதும், அதைத் தொடர்ந்து இந்திய அளவில் எவ்விடத்திலும் வன்முறையோ, கலகங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.