ரசிகர்களைக் கவர்ந்த ஜோதிகா

slider சினிமா
JYOTHIKA SILAMBAM

 

நடிகை ஜோதிகா தற்போது ‘பொன்மகள் வந்தாள்’ என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் துணிச்சலான ஆக்‌ஷன் நிரம்பிய கேரக்டரில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்ற இவர், பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களுக்கு முதன்மை கொடுத்து நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில்  ஒரு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலை கட்டி பங்கேற்றார் ஜோதிகா. அப்போது அங்குள்ள மேடையிலேயே சிலம்பம் சுற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஜோதிகா சிலம்பம் சுற்றும்போதும் ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோவை இப்போது ’சில்லுக்கருப்பட்டி’ படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜோதிகாவின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.