பிரசாந்த் ஜோடியாக சமந்தா!

slider சினிமா

 

PRASANTH-SAMANTHA

 

சில வருடங்களுக்கு முன்பு இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்  ‘அந்தாதூன்’. இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக்காகவுள்ளது. ஹீரோவாக பிரசாந்த் நடிக்க, இப்படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார். இதில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகை நயன்தாராவின் ‘மாயா’, டாப்சியின் ‘கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இவர் அடுத்து இயக்கவுள்ள படமும் திகில் கலந்த படமாகவே எடுக்கவுள்ளார். இந்தப் படத்தில்  சமந்தா முக்கிய ரோலில் நடிக்கிறார். அனேகமாக இதன்பிறகு பிரசாந்த் படத்தில் சமந்தா நடிக்கலாம் என்றும்  கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரபலங்களான இளையராஜா, பிரசாந்த், சமந்தா, இயக்குநர் ராஜா என்று ஒரே படத்தில் இணைவதால் இந்தப் படம் குறித்து குறித்து இப்போதே பெரியளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.