பிரபல தெலுங்கு நடிகருடன் நடிக்க மறுத்த திரிஷா

slider சினிமா
TRISHA

 

தெலுங்கு பிரபலம் சிரஞ்சீவி அரசியலைவிட்டு மீண்டும் திரைத்துறைக்கு திரும்பிய பிறகு நடித்த முதல்படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு கதாபத்திரத்தில் நடித்திருந்தார். இப்   படத்தை தொடர்ந்து  ‘ஆச்சார்யா’ என்கிற படத்தில் தற்போது சிரஞ்சீவி நடித்து வருகிறார்.  இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கி வருகிறார். இது சிரஞ்சீவி நடிக்கும் 152-வது படமாகும். இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருவதாக தகவல் வெளியானது. சில தினங்களுக்கு திரிஷா இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது திரிஷா தனது டுவிட்டரில்,  ‘’சில சமயங்களில் ஆரம்பத்தில் சொன்ன, கலந்துரையாடிய விஷயங்கள் நடக்கும்போது வித்தியாசமாக மாறும். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சிரஞ்சீவியின் திரைப்படத்திலிருந்து நான் விலகிவிட்டேன். படக்குழுவுக்கு வாழ்த்துகள். என் அன்பார்ந்த தெலுங்கு ரசிகர்களே, மீண்டும் உங்களை ஒரு நல்ல படத்தின் மூலம் சந்திப்பேன் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.