கொரானா வைரஸினால் நின்றுபோன இரண்டாவது தமிழ்ப் படம்!

slider சினிமா
ACTOR KARTHI

 

நடிகர் கார்த்தி நடிப்பிலும்,  பாக்யராஜ் கண்ணன் இயக்கத்திலும் உருவாகிவரும் படம் ‘சுல்தான்’  இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வருகிறார். கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். கார்த்தி  ரசிகர்கள் இந்தப் படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நடிகர் விக்ரம் நடித்துவரும் படமான ‘கோப்ரா’படத்தின் படப்பிடிப்பை கொரானா வைரஸ் நோயினால் தொடர்ந்து நடத்தமுடியாமல் போனது. அது போலவே ’சுல்தான்’ படத்துக்கும் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில்,  ‘’ கொரோனா வைரஸ் தாக்கத்தால் எங்களின்  ‘சுல்தான்’ படத்தின் அப்டேட் உட்பட எல்லாப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. அமைதியாக இருப்போம், பாதுகாப்பாக இருப்போம்” என்று கூறியிருக்கிறார்.  கோப்ராவுக்கு அடுத்து சுல்தான் என்று கொரானா வைரஸினால் படங்கள் தற்காலிகமாக நின்றுபோவது தொடர்வதாக, கோலிவுட் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.