சிம்பு, மிஷ்கின் காம்பினேஷனில் வடிவேலு!

slider சினிமா

 

vadivelu

 

நடிகர் சிம்பு தற்போது இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.  இதற்கடுத்து இயக்குநர் மிஷ்கின் படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக மிஷ்கின் சொன்ன கதை சிம்புவுக்கு மிகவும்  பிடித்துப்போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலும் நடிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்து வருகிறது. ஆனால், இயக்குநர் ஷங்கர் தயாரித்த ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க வடிவேலு மறுத்ததால் படத்துக்காக செலவிட்ட ரூ.10 கோடியை வடிவேலு ஈடுகட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தினர் ஷங்கர் படத்தை முடித்து கொடுக்கும்படி வடிவேலுவை நிர்ப்பந்தித்தனர். இதை ஏற்க  வடிவேலு மறுத்ததால் இவர் படங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.

மேலும்,  புதிய படங்களுக்கு வடிவேலுவை எந்த தயாரிப்பாளரும் ஒப்பந்தமும் செய்யவில்லை. இந்நிலையில்தான் இப்போது சிம்பு மற்றும் மிஷ்கின் காம்பினேஷனில் வடிவேலு நடிக்கப் போவதாக தகவல் வந்துள்ளது. ஏற்கெனவே வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடைவிதித்துள்ள நிலையில் இந்தப் படத்தில் நடிப்பது எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்பது குறித்து கோலிவுட்டில் பட்டிமன்ற அளவுக்கு பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.