இனி அம்மா வேடத்தில் நடிக்கமாட்டேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்!

slider சினிமா

 

iswaryarajesh

 

 

தமிழ் சினிமா  இளம் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். எந்தக்  கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக்கூடியவர். ’காக்காமுட்டை,’  ’கனா’ போன்ற படங்கள் மூலம் வெகுசீக்கிரத்தில்  தன்னுடைய திறமையால் ரசிகர்களை அதிக எண்ணிக்கையில் பெற்றிருப்பவர். இவர் ஒரே நேரத்தில் கதாநாயகியாகவும், குழந்தைகளுக்கு அம்மாவாகவும், தங்கையாகவும் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தவர் சில வருடங்களாக  மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் ஒரு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ், ’’சாதிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அம்மா வேடத்தில் நடித்ததால், பிரபல நாயகர்கள் என்னை தவிர்க்கிறார்கள். வயது அதிகமாகிவிட்டதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். எனவே அம்மாவாக இனிமேல் நடிப்பதில்லை என்று முடிவு செய்து இருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.