திரௌபதி இயக்குநரின் அடுத்த பட அறிவிப்பு!

slider சினிமா

 

director g-mohan

 

இயக்குநர் ஜி.மோகன் சில வருடங்களுக்கு முன்பு ’பழைய வண்ணாரப்பேட்டை’ என்கிற படத்தினை எடுத்திருந்தார். அதன்பிறகு, அண்மையில் இவரது இயக்கத்தில் ’திரௌபதி’ படம் வெளியாகி பெரும் பரபரப்பையும், நல்ல வசூலையும் கண்டுள்ளது. இந்தப் படம் ஆணவக் கொலைகள் குறித்து முக்கியமாகப் பேசுவதால் ஒரு சில அமைப்புகளிடமிருந்து இந்தப் படத்திற்கு எதிரான குரல்களும் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் ஜி. மோகன் தனது அடுத்த படம் குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில்,  ’’ ‘திரெளபதி’ன்னு கடவுள் பெயர் வைத்ததால் தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவா புரியுது. அடுத்த பட பெயரும் கடவுள் பெயர் தான். விரைவில் அறிவிப்பு வரும். காத்திருங்கள்’’ என பதிவிட்டுள்ளார். இவரது இந்த டுவிட்டர் தகவலே சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை இப்போது ஏற்படுத்தியுள்ளது.