அமீர்கானுக்காக உடல் எடையை குறைக்கும் விஜய்சேதுபதி!

slider சினிமா

 

 

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணியில் உள்ளார். தற்போது இளைய தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். தமிழ் தவிர வேறு மொழிகளிலிருந்தும் பட வாய்ப்புகள் விஜய்சேதுபதிக்கு வந்து குவிகின்றன. முக்கியமாக,   ‘சைரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்கு படத்தில் சிரஞ்சீவியுடனும்,  ‘மார்கோனி மதாய்’ என்ற மலையாள படத்தில் ஜெயராமுடனும் நடித்துள்ளார் விஜய்சேதுபதி.

இந்நிலையில் இப்போது பாலிவுட் பிரபலம் அமீர்கானுடன் ‘லால் சிங் சத்தா’ என்ற இந்தி படத்தில் நடிக்கவும் விஜய்சேதுபதிக்கு வாய்ப்பு வந்துள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் 1994-ம் ஆண்டு வெளியாகி ஆறு ஆஸ்கார் விருதுகளை வென்ற ‘பாரஸ்ட் கம்’ படத்தின் இந்தி ரீமேக்காகத்தான்  ‘லால் சிங் சத்தா’ படமாக உருவாகிறது.

இந்த படத்தில் அமீர்கான்  தனது உடல் எடையை 21 கிலோ குறைத்து நடிக்கிறார். அவரது தோற்றம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் விஜய் சேதுபதியும்  ‘லால் சிங் சத்தா’ படத்தில் 25 கிலோ உடல் எடையை குறைத்து நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.