சூர்யாவின் படத் தலைப்புக்கு சிக்கல்!

slider சினிமா
சூர்யாவின் அருவா

நடிகர் சூர்யாவும் இயக்குநர் ஹரியும் மீண்டும் இணையும் படத்துக்கு ‘அருவா’ என்ற தலைப்பு வைக்கப்பட்டது. சூர்யா அண்ணன், தம்பி என்று இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், இருவருக்கும் நடக்கும் மோதலே படம் என்றும், கிராமத்துப் பின்னணியில் படத்தை எடுக்கவுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இதே பெயரில் பாடலாசிரியர் ஏகாதசி படம் இயக்கியிருக்கிறார். இயக்குநர் தருண்கோபி தயாரித்துள்ளார். இந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. ஆனாலும் பெர்லின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகள் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி ஏகாதசி கூறுகையில்,  “நாங்கள்  ‘அருவா’ என்கிற பெயரில் படம் எடுத்துள்ளோம். இதே பெயரை சூர்யா படத்துக்கு வைத்து இருப்பது ஆச்சரியமாக உள்ளது. தலைப்பை விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.  இதனால் சூர்யாவின் புதுப்பட  தலைப்பு மாற்றப்படலாம் என்றும் கோலிவுட்டில் பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது.