சமூக சேவகர் வேடத்தில் அமிதாப் பச்சன்!

slider அரசியல்
amithab as palam kalyanasundaram

 

தமிழகத்தில் சமூக சேவகராக பல்வேறு தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுபவர் பாலம் கல்யாணசுந்தரம். இவர்  ‘பாலம்’ அமைப்பை நிறுவி, அதன் மூலமாக பல்வேறு சமூகப் பணிகளை  செய்து வருகிறார்.  இவரது சமூக வேவையை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவில் வழங்கப்பட்ட ரூ.30 கோடி பரிசு தொகையை பொதுத்தொண்டுக்கே திருப்பி கொடுத்தவர் பாலம் கல்யாணசுந்தரம். இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவரது வாழ்க்கை கதை சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் வெளியானது. இந்தப் புத்தகத்தை படித்த பாலிவுட் பிரபலம்  அமிதாப்பச்சன், அவரது வாழ்க்கை என்னை நெகிழச்செய்கிறது. அவரது வாழ்க்கை கதை படத்தில் நானே நடிக்கிறேன். பாலம் கல்யாணசுந்தரத்தின் இளமைக் கால கதாபாத்திரத்தில் எனது மகன் அபிஷேக்பச்சன் நடிப்பார் என்று இந்தி தயாரிப்பாளர் பரண் ஆதர்ஷிடம் கூறியுள்ளார். இதையடுத்து தயாரிப்பாளர் பரண் ஆதர்ஷ் சென்னை வந்து பாலம் கல்யாணசுந்தரத்தை சந்தித்து பேசி, பட வேலைகளை தொடங்கிவிட்டார். பாலம் கல்யாணசுந்தரத்தின் தாய் வேடத்தில் பாலிவுட் பிரபலம் வித்யா பாலன் நடிக்கிறார். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்துக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை பொதுத்தொண்டுக்கு வழங்க பாலம் கல்யாணசுந்தரம் முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.