இயக்குநரை மிரட்டிய பிரியா பவானி சங்கர்!

slider சினிமா
priya bhavani shankar

 

நடிகர் அருண் விஜய்யுடன் பிரியா பவானி சங்கர் நடித்த  ‘மாஃபியா’ திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸாகியுள்ளது. இந்தப் படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் மீம் ஒன்றை பிரியா பவானி சங்கர் உருவாக்கியுள்ளார். இதற்கு சில பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகை பிரியா பவானி சங்கர் ‘மாஃபியா’ படத்தை அடுத்து நடித்துவரும் படம் ‘குருதி ஆட்டம்”.  இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ஸ்ரீ கணேஷ் தான் இந்தப் படத்தின் இயக்குநர். இவர் ஏற்கெனவே எட்டு தோட்டாக்கள் என்கிற படத்தை இயக்கியவர். இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இயக்குனர் ஸ்ரீ கணேஷுக்கு மீம்ஸ் போடுவதில் ஆர்வம் அதிகமாம். இதனால் தனக்காக ஒரு மீம் போட்டு தரும்படி நடிகை பிரியா பவானி சங்கர் தன்னை மிரட்டி கேட்டாராம். இதற்காக ‘மாஃபியா’ வாழ்த்து தெரிவித்து பவானி சங்கர் ஆரம்பித்த மீம்ஸ்க்கு ஸ்ரீகணேஷ் ஒரு மீம்ஸை தயார் செய்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்று கோலிவுட்டில் ஒரு செய்தி பரபரக்கிறது.