ஆசியாவில் சிறந்த மல்யுத்த அணி இந்தியா!

slider விளையாட்டு

 

 

இந்திய மல்யுத்த அணி உலகளவில் பிரசித்தி பெற்றது. ஒலிம்பிக்கிலும் மல்யுத்ததுக்காக இந்தியா பல பதக்கங்களை பெற்றிருக்கிறது. தற்போது ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் சிறந்த அணி என்கிற கௌரவத்தை பெற்றிருக்கிறது இந்திய மல்யுத்த அணி.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில்  அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் செயல்பட்ட இந்திய வீரர் ஜிதேந்தர் குமார் 74 கிலோ உடல் எடைப் பிரிவில் மங்கோலியா வீரர் ஜன்டான்புட்டை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன், ஒலிம்பிக் தகுதிசுற்று போட்டிக்கான இந்திய அணியிலும் இடத்தை உறுதி செய்தார்.

ஆனால் இறுதி ஆட்டத்தில் ஜிதேந்தர் 1-3 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் கஜகஸ்தானின் டேனியர் காசனோவிடம் தோற்றதால் வெள்ளிப் பதக்கமே அவருக்கு கிடைத்தது.

மேலும், பிற இந்திய வீரர்களான தீபக் பூனியா (86 கிலோ), ராகுல் அவாரே (61 கிலோ) ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர். இந்தப் போட்டியில் இந்தியா மொத்தம் ஐந்து தங்கம் உள்பட இருபது பதக்கங்களை குவித்ததால்  ஆசிய சாம்பியன் என்கிற கௌரவத்தைப் பெற்றது.

  • எஸ்.எஸ்.நந்தன்