மூன்று வேடங்களில் சிவகார்த்திகேயன்

slider சினிமா

 

 

தமிழ் சினிமாவில் சயின்ஸ் பிக்ஸன் படமாக வெளிவந்த  ‘இன்று நேற்று நாளை’படத்தின் இயக்குநர் ரவிக்குமார் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்குவதாக 2018-ம் ஆண்டு ஒரு படம் ஒப்பந்தமானது. இடையில் பைனான்ஸ் பிரச்னை காரணமாக இப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

தற்போது இந்தப் படத்தின்  பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. அறிவியல் சார்ந்த படமாக உருவாகும் இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.