தனுஷ் மீது வழக்கு தொடருவேன் – இயக்குநர் விசு! 

slider சினிமா

 

விசு-தனுஷ்

நடிகர் ரஜினிகாந்த் நடித்து 1981-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘நெற்றிக்கண்’. இந்தப் படத்தை இயக்குநர் பாலசந்தர் இயக்கியிருந்தார். அவரது சொந்த நிறுவனமான கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தின் கதாசிரியர் பிரபல இயக்குநர் விசு என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் ‘நெற்றிக்கண்’ படத்தை ரீமேக் செய்து ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக தனுஷ் தொடர்ந்து கூறி வருகிறார்.  தற்போது இதற்கான ஆரம்பகட்ட வேலைகளை அவர் தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. மேலும், தற்போதைய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கதையில் சிறிய மாற்றங்கள் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்  தனது அனுமதி இல்லாமல் ரீமேக் செய்யக் கூடாது என்று இயக்குநர் விசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், “தனுஷ் ’நெற்றிக்கண்’ படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பொய் என்றால் கண்டுகொள்ள மாட்டேன்.  ஆனால், உண்மையாக இருக்குமானால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவிடம் அவர் உரிமம் வாங்குவதைவிட கதாசிரியரான என்னிடம் வந்து கேட்பதே சரியாக இருக்கும். என்னிடம் உரிமம் பெறாமல்  ‘நெற்றிக்கண்’ படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.”  என்று இயக்குநர் விசு கூறியுள்ளார்.