ஏ.ஆர். முருகதாஸ் கதை, வசனத்தில் த்ரிஷா!

slider சினிமா

 

trisha at uspekistaan

 

 

தமிழின் முன்னணி நடிகையான த்ரிஷா, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த     ‘96’, மற்றும் ரஜினியின்  ‘பேட்ட’ படங்களுக்கு பிறகு  ‘ராங்கி’, ’பரமபத விளையாட்டு’,  ‘பொன்னியின் செல்வன்’,  ‘சுகர்’ என பல படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ‘ராங்கி’ படத்தை  ‘எங்கேயும் எப்போதும்’ மற்றும் ‘இவன் வேறமாதிரி’ படங்களை இயக்கிய சரவணன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்துள்ளது. ‘ராங்கி’ படத்திற்கு பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கதை வசனம் எழுதியிருக்கிறார். இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் நடைபெற்றது. அங்கு மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் குளிர். ஆயினும் அதிகாலை படப்பிடிப்பு என்றால்கூட அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார் திரிஷா. அதோடு உஸ்பெகிஸ்தானில் தான் எடுத்துக்கொண்ட செல்பிக்களையும் தற்போது த்ரிஷா வெளியிட்டுள்ளார்.