இந்திய ஆக்கிக்கு கிடைத்த பெருமை!

slider விளையாட்டு
manpreeth-singh

 

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு முன்பு ஆக்கி விளையாட்டு பெரும் பிரபலமாக இருந்து வந்தது. இந்த விளையாட்டில் தியான் சந்த் பலமுறை ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வெல்ல காரணமாக இருந்துள்ளார். அதுவெல்லாம் பழங்கதையாகி இந்தியாவில் கிரிக்கெட் பெரும் வைரல் அடைந்தது.

தற்போது இந்திய ஹாக்கி அணி சர்வதேச போட்டிகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இதன்மூலம் பழைய இடத்தை நோக்கி இந்திய ஆக்கி அணி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி இந்திய ஆக்கிக்கு கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால்,  சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கு இந்திய ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதுதான் அந்த மகிழ்ச்சிக்குரிய தகவல்.

தேசிய விளையாட்டு சங்கத்தினர், ஊடகத்தினர், ரசிகர்கள், வீரர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் மன்பிரீத்சிங் 35.2 சதவீத வாக்குகள் பெற்று விருது பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஆர்தர் வான் டோரன் (பெல்ஜியம்) 19.7 சதவீத வாக்குகளும்,  மூன்றாம் இடத்தில் லுகாஸ் வில்லா (அர்ஜென்டினா) 16.5 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இந்த விருது 1999-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சிறப்புமிக்க இந்த விருதை பெறும் முதல் இந்தியர் என்ற கௌரவத்தை மன்தீப்சிங் பெறுகிறார்.  கடந்தமுறை நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணியை தகுதி பெற வைத்ததில் முக்கிய பங்காற்றிய 27 வயதான நடுகள வீரரான மன்பிரீத்சிங் இதுவரை 260 சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கிறார். 2012 மற்றும் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கிலும் பங்கேற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • எஸ்.எஸ்.நந்தன்