ரசிகர்களை குழப்பும் ’சர்வர் சுந்தரம்’!

slider சினிமா

 

நடிகர் சந்தானம் நடிப்பில் ’சர்வர் சுந்தரம்’ படம் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். சந்தோஷ்  நாராயணன் இசையத்துள்ளார். ஆனந்த் பால்கி  என்பவர் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தினை கடந்த மாதம் 31-ம் தேதியன்று ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், நடிகர் சந்தானம் நடித்திருந்த இன்னொரு படமான ‘டகால்டி’ படம் இதே தேதியில் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ’சர்வர் சுந்தரம்’ படக்குழு தங்களது ரிலிஸ் தேதியை பிப்ரவரி 14-ம் தேதிக்கு மாற்றியது. இப்போது இதிலும் மாற்றம் வந்துள்ளது. அதாவது சர்வர் சுந்தரம் இந்த மாதம் 21-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு புது அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதனால் சந்தானத்தின் ரசிகர்கள் பெரும் குழப்பமடைந்திருப்பதாக கூறுகிறது கோலிவுட் வட்டாரம்.

.