அஜித்தோடு மோத ஆசைப்படும் விஜய் சேதுபதி!

slider சினிமா

 

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவருக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரை ஹீரோவாக நடிக்க வைத்து படம் எடுக்கவே பல தயாரிப்பாளர்கள் காத்து கிடக்கிறார்கள். ஆனாலும் விஜய் சேதுபதி ரஜினியுடன் ’பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தார் இப்போது ‘மாஸ்டர்’ விஜய் படத்திலும் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நடிகர் விஜய் சேதுபதி அந்த விழாவில் விஜய் சேதுபதி பேசும்போது, “அஜித்துடன் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. ஹீரோவாக லைம்லைட்டிலுள்ள ஒரு ஹீரோ இப்படி வில்லனாக நடிப்பதில் காட்டும் ஆர்வம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் கமெண்டுகளும் பெரியளவில் வட்டமடிக்க தொடங்கியிருக்கிறது.

 

.