இனி காதல் படங்களில் நடிக்கமாட்டேன் – விஜயதேவரகொண்டா!

slider சினிமா
vijay devarakonda

 

தெலுங்கு  சினிமாவில் இளம் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் வெளியான  ‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் பிரபலமானவர்.  இந்தப் படத்தைத் தொடர்ந்து ’கீதா கோவிந்தம்’, ’டாக்சிவாலா’, ’நோட்டா’, ’டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி நாயகனாகவும் ஆனார். இப்போது இவர் நடிப்பில் அடுத்து தயாராகிவுள்ள ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 140ம் தேதியன்று காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் ரிலீஸாகிறது. இதற்காக இப்படத்தின் அறிமுக விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஹீரோ விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார்.  இந்த விழாவில் அவர் பேசும்போது, ‘’மக்களின் ரசனை மாறி கொண்டே இருப்பதால், இனி காதல் தொடர்பான படத்தில் நடிக்கப் போவதில்லை. மேலும், ரசிகர்களுக்கு புது அனுபவங்களைத் தரும் படத்திலேயே நடிக்க விரும்புகிறேன்’’ என்று பேசியுள்ளார்.