அறிவித்த ஜாக்கிசான்!

slider உலகம்

 

சீனாவில் வுகான் நகரத்தில் உருவான கொரோனா வைரஸுக்கு இதுவரைக்கும் 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் நோய்  இருபத்தைந்து நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த  வைரஸை தடுக்க சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவசர அவசரமாக 1000 படுக்கையறைகளுடன் இரண்டு தற்காலிக மருத்துவமனைகளையும் உருவாக்கியிருக்கிறது.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிசான் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இந்த கொடூர வைரஸை தோற்கடிக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முக்கியம். என்னைப் போன்று பலரும் இதனை நம்புகின்றனர். அதனால் வைரஸை கட்டுப்படுத்த விரைவில் ஒரு மாற்று மருந்தை உருவாக்க முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். எனவே, தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்தால் அவர்களுக்கு ஒரு மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் பரிசு அளிப்பேன். இந்த அறிவிப்பு பணத்தை பொருட்டாகக் கொண்டதல்ல. எனது நண்பர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு போராடுவதை பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் நன்றாக வாழ வேண்டும் அதற்காகத்தான்’’ என்று கூறியுள்ளார்.