ரிலீஸ் குழப்பத்தில் அனுஷ்கா – மாதவன் நடித்த படம்!

slider சினிமா
சைலன்ஸ் படத்தில் அனுஷ்கா-மாதவன்

 

கடந்த ஆண்டு  அனுஷ்கா, மாதவன் நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம் ’சைலன்ஸ்’. இந்தப் படத்தில் அஞ்சலி மற்றும் சில ஹாலிவுட் நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.  அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நான்கு இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீஸுக்கும் இடையே நடக்கும் க்ரைம் திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாரான நிலையில் அடுத்தடுத்து ரிலீஸ் தேதி மட்டும் மாறிக் கொண்டிருக்கிறது. முன்பு  தமிழ், தெலுங்கு, இந்தியில்  ஜனவரி 31-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் பிப்ரவரி 20-ம் தேதி ரிலீஸாகும் என்று மறு அறிவிப்பு ஒன்று வெளியாகியது. தற்போது  இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மீண்டும் தள்ளி வைத்தது. இதன்படி இப்படம் ஏப்ரல் 2-ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு தரப்பில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.