சினிமா உற்சாகம் கொடுக்க வேண்டும் – நடிகை தமன்னா!

slider சினிமா
thamanna

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான  தமன்னா நடிப்பில் கடந்த ஆண்டு ’கண்ணே கலைமானே,’ ‘ தேவி-2,’ ‘ பெட்ரோமாக்ஸ்,’ ’ஆக்‌ஷன்’ ஆகிய நான்கு படங்கள் வெளியாகியது. இதன்பிறகு ஓர் இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.  ’போலோ சுதியான்’ என்கிற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தில் இப்போது பிஸியாக நடித்து வருகிறார்.  மேலும், இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை தமன்னா.

நடிகை தமன்னா சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார்.  அந்தப் பேட்டியில்,   “சினிமா என்பது வினோதமான சாதனம். திரையில் எதையாவது சொல்லுங்கள். எதையாவது காட்டுங்கள். ஆனால், படத்தை பார்க்கிறவர்கள் இரண்டரை மணி நேரம் வெளி உலகத்தை மறந்து ஜாலியாக சந்தோஷமாக இருக்க வேண்டும். நான் அழவைக்கிற படங்களை பார்க்க மாட்டேன். அவற்றில் நடிக்கவும் விருப்பம் இருக்காது. இது மாதிரி படங்கள் பார்க்கும்போது நமக்கு உள்ளேயே ஒரு எதிர்மறை உணர்வு வந்து விடும் என்ற பயம் ஏற்படும். நமது இதயமும் பாரமாகி விடும். மனது கலங்கி கண்ணீர் வரும். பெண்களை கேவலப்படுத்துவது மாதிரியான கதாபாத்திரங்களிலும் நான் நடிக்க மாட்டேன். சினிமாவை பற்றி நாம் ஏதாவது கற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அது உற்சாகத்தை கொடுப்பது மாதிரியும், கஷ்டங்களை மறக்கிற மாதிரியும் இருக்க வேண்டும். படங்களில் சிறிய அறிவுரையும் இருக்க வேண்டும். கெட்ட விஷயங்களை திணிப்பது மாதிரியும், தெரியாதவர்களுக்கு கெட்ட  விஷயங்களை தெரியப்படுத்துவது மாதிரியும் படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.